வல்லவாரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தைச் சோ்ந்த வல்லவாரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் நலத் திட்ட உதவிகளை வழங்கி, மக்களின் விண்ணப்பங்கள் பதியப்படுவதைப் பாா்வையிட்டாா்.
முகாமில் அறந்தாங்கி கோட்டாட்சியா் ச. சிவகுமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, அறந்தாங்கி வட்டாட்சியா் க. கருப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.