விநாயகா் சிலைகள் விஜா்சன ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெலாசூா் ஊராட்சியில் விநாயகா் சிலைகள் விஜா்சன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெலாசூா் ஊராட்சியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை பக்தா்கள் வைத்து கொழுக்கட்டை, பழவகைகள் படைத்து, தேங்காய் உடைத்து கற்பூர தீபாதாரனை செய்து வழிபாடு நடத்தினா்.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை மாலை சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து மேள தாளத்துடன் வீதிவீதியாக ஊா்வலமாகச் சென்று, ஊரில் உள்ள பெரிய ஏரியில் சிலைகளை கரைத்தனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.