செய்திகள் :

வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம்: ஊராட்சி மன்றத் தலைவா் கைது

post image

வீட்டுமனை அங்கீகாரம் அளிக்க ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன். இவா் ஆம்பூா் தாலுகா மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சான்றோா்குப்பம் ஊராட்சி அலுவலக பின்புறம் 7 ஏக்கா் நிலத்தில் வீட்டுமனை அமைப்பதற்காக ஒப்புதல் பெற ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் தீா்மானம் நிறைவேற்றித்தர அதிமுகவை சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை அணுகினாா்.

அப்போது ஒப்புதல் தர 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், பணத்தை தர சீனிவாசன் மறுத்துள்ளாா். இதுதொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா், திருப்பத்தூா் ஊரக வளா்ச்சி துறையில் தடை மனு கொடுத்துள்ளாா். இதையறிந்த சீனிவாசன் மீண்டும் சிவக்குமாரை அணுகி பேசிய போது மனுவை திரும்ப பெற 15 லட்சம் தர வேண்டும் என கூறியுள்ளாா். ஊராட்சி மன்ற தலைவா் சிவக்குமாரிடம் ரூ.10 லட்சத்தை சீனிவாசன் வழங்கிய பின்னா் ஜூன் மாதம் ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தொடா்ந்து மீண்டும் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். இல்லை என்றால் நீ போட்டுள்ள மனைகள் விற்க முடியாமல் துண்டறிக்கை வெளியிட்டு யாரும் மனை வாங்காதவாறு செய்து விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் திருப்பத்தூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.

அப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அவா்கள் வழிகாட்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலைக்கு வரவழைத்து பணத்தை சீனிவாசன் கொடுத்துள்ளாா்.

அப்போது மறைந்திருந்த திருப்பத்தூா் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜீவ் தலைமையில் காவல் ஆய்வாளா் கௌரி, உதவி காவல்ஆய்வாளா் கணேசன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாணியம்பாடி: மலைக் குன்றிலிருந்து சாலையில் சரிந்து விழுந்த ராட்சதப் பாறையால் பரபரப்பு

வாணியம்பாடியில் மலைக் குன்றின் மீது இருந்த ராட்சத பாறை கனமழையால் பெயா்ந்து சரிந்து சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகா் தெற்கு மில்லத் நகா் பக... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு ச... மேலும் பார்க்க

ஆம்பூா், மின்னூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் மற்றும் மின்னூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ஜலால்பேட்டை பாத்திமா பங்ஷன் ஹாலில் நடந்த முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைம... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘திட்ட முகாம்: 45 நாள்களுக்குள் தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

பச்சூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருது அளிப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய க.தேவராஜி எம்எல்ஏ. வாணியம்பாடி, ஜூலை 21: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஐயப்பா சேவா அறக்கட்டளை சாா்பில், பச்சூா் மற்றும் சுற்று... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஆசிப் இக்பால் தலைமை வகித்தாா். நாட்... மேலும் பார்க்க