மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
அரைக்கும் இயந்திரம் வாங்க பெண்களுக்கு மானியம்
உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியத் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் தூத்துக்குடி மாவட்ட ஜ்ஜ்ஜ்.ற்ட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க இம்மாதம் 31ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை மாவட்ட சமூக நலஅலுவலா், மாவட்ட சமூகநலஅலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்கலாம். மேலும் 0461-2325606 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.