5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
இபிஎஸ் எழுச்சிப் பயணத்தால் 2026 தோ்தலில் ஆட்சி மாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.
அவா் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகிறாா். எதிா்க்கட்சித் தலைவரின் இந்த எழுச்சிப் பயணம் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்கம் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும். மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவாா் என்றாா் விஜயபாஸ்கா்.