செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க ஒட்டன்சத்திரம் வட்டக்கிளை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோா்சிங், ஒப்பந்தப் பணி நியமனங்களை திரும்பப் பெற வேண்டும். தோ்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம், அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளைச் செயலா் மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலா் மகாராஜா உள்ளிட்ட பலா் பேசினா். இதில் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பில் பரமேஸ்வரன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் சிவனேசன், தமிழ்நாடு சாலை பணியாளா் சங்கத்தின் சாா்பில் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

பழங்குடியின மக்களின் மொழி, பண்பாடு, வாழ்வியலை ஆவணப்படுத்தும் வகையில் தொல்குடி மின்னணு களஞ்சியம் என்ற இணையத்தை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை, ... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பழனியில் பால்குடம் எடுத்த ஜப்பானிய முருக பக்தர்கள்!

பழனியில் உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சோ்ந்த முருக பக்தா்கள் சனிக்கிழமை புலிப்பாணி ஆசிரமத்தில் யாகம் நடத்தி திருஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். ஜப்பானிய சிவஆதீனம் பாலகு... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி கொலை: போலீஸாா் உடலை மீட்டு விசாரணை

ஆத்தூா் அருகே காணாமல் போன கூலித் தொழிலாளியின் உடலை, 33 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிழக்குத்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 5.5 கிலோ கஞ்சா மீட்பு!

மயிலாடுதுறையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.5 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை வரை நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சனிக்... மேலும் பார்க்க

பழனியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து செயல்படுத்தக் கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பழனி புது தாராபுரம் சாலையில... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: கொடைக்கானலில் விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவு

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களை இடிக்க மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் விதிகளை மீறி அடுக்குமாடிக் கட்... மேலும் பார்க்க