செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் விஷம் குடித்த தந்தை, மகள்

post image

ஒட்டன்சத்திரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை, மகள் விஷம் குடித்தனா். இதில் தந்தை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் திடீா் நகா் பகுதியைச் சோ்ந்த லாரி ஒட்டுநா் செல்லப்பாண்டி (40). இவரது மனைவி சுபா. மகள் ஹீமதி (16), மகன் லோகேஷ் (13).

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி சுபா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஹீமதி, லோகேஷ் ஆகிய இருவரும் கோவையில் உள்ள உறவினா் வீட்டில் தங்கிப் படித்து வந்தனா்.

இந்த நிலையில், செல்லப்பாண்டி கோவைக்குச் சென்று மகள், மகனை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒட்டன்சத்திரத்துக்கு அழைத்து வந்தாா். புதன்கிழமை கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த செல்லப்பாண்டி மகள், மகன் ஆகிய இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, தானும் அருந்தினாா். இதில் ஹீமதி மட்டும் பாலைக் குடித்தாா். லோகேஷ் பாலைத் தட்டி விட்டு ஒடிவிட்டராம். இந்த நிலையில், செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே

உயிரிழந்தாா். மகள் ஹீமதி ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோ... மேலும் பார்க்க

விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!

நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொ... மேலும் பார்க்க

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்... மேலும் பார்க்க