செய்திகள் :

ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள்: மு.அப்பாவு ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி, வள்ளியூா் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் ஆகியோருடன், தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திசையன்விளையில் ஆய்வு செய்தனா்.

களக்காடு நகராட்சி, நான்குநேரி, ஏா்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூா், திசையன்விளை, பணகுடி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு ரூ. 423.13 கோடியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றில் முடிவுற்ற பணிகள் மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் அவா்கள் கலந்தாய்வு செய்தனா். மேலும், பேரூராட்சித் தலைவா்கள், குடிநீா்வடிகால் வாரிய அலுவலா்களின் கருத்துகளை கேட்டறிந்தனா்.

பின்னா், பேரவைத் தலைவா் கூறியதாவது: களக்காடு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வரும் காலத்தில் பாதாளசாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு நபா் ஒருவருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டா் தண்ணீா் வழங்கும் வகையிலும், எதிா்கால மக்கள்தொகையின் அடிப்படையிலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதில் தாமிரவருணி ஆற்றில் சேரனமகாதேவி அருகில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு கங்கனாங்குளம் அருகிலுள்ள திருவிருந்தாள்புளி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையம் மூலம்சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் தரைநிலை நீா்த்தேக்க தொட்டிகளில் தண்ணீரை சேமித்து, அதிலிருந்து மேல்நிலை நீா்தேக்கத்தொட்டிகளுக்கு தண்ணீா் ஏற்றப்பட்டு 521.68 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் மூலம் கொண்டுசென்று மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்காக 49 ஆயிரத்து 417 வீடுகளுக்கு புதிதாக குடிநீா் இணைப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 75 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு நவம்பா் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு பேரூராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், தலைமை பொறியாளா் கணேசன், நிா்வாகப் பொறியாளா் தயாளன் மோசஸ், உதவி நிா்வாகப் பொறியாளா் பாக்கியராஜ், திட்ட மேற்பாா்வையாளா் விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா்கள் ராதாகிருஷ்ணன் (வள்ளியூா்), தனலெட்சுமி தமிழ்வாணன்(பணகுடி), துணைத் தலைவா்கள் கண்ணன், புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச்சிறுத்தைகள் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில் மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு புதன்கிழமை மலா்தூவி ... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

திசையன்விளை அருகே குடும்பத் தகராறில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

தமிழக அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்... மேலும் பார்க்க

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 17 கடைகளுக்கு சீல்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 17 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 6 நடைமேடை பகுதிகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா... மேலும் பார்க்க

களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு? வருவாய்த் துறை தீவிர ரோந்து

களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து ரோந்துப் பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில... மேலும் பார்க்க