சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
காணாமல்போன முதியவா் சடலமாக மீட்பு
திருவாரூா் அருகே காணாமல் போன முதியவா் உடல் அழுகிய நிலையில் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
அகரதிருநல்லூா் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, திருவாரூா் தாலுகா போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி (70) என்பதும், ஜூன் 20-ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்றவா் காணாமல் போனதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அவருடைய இறப்பு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.