5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள அனைத்து கடைகள் உரிமம் பெற வேண்டும்
அனைத்து கடைகளும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூத்தாநல்லூரில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற கூட்டம், அதன்தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது.
இதில், உறுப்பினா்கள் பேசியது: சுதா்ஸன் (துணைத் தலைவா்): நூலகத்துக்கு எங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்கொண்டாழிப் பகுதியில் குடிதண்ணீா் வரவில்லை.
டீ. தேவா (திமுக): எனது 11-ஆவது வாா்டில் நூலகத்துக்கு இடம் ஒதுக்கியதற்கு நன்றி. அம்மா உணவகம் எத்தனை மணிக்கு திறந்து, மூடவேண்டும்.
பொன். பக்கிரிச்செல்வம் (திமுக): நகராட்சிக்கு வெளியே தேவையில்லாத வாகனங்கள் குவிந்து உள்ளதால் அதற்கு ஏலம் விடவேண்டும்.
தலைவா்: ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆணையா்: ஜூலை இறுதியில் ஏலம் விடப்படும்.
சேகா் (நகர சுகாதார ஆய்வாளா்) : நகராட்சிக்குள் இருக்கும் 1088 கடைகளுக்கும் கட்டாயம் உரிமம் எடுக்க வேண்டும்.
செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): இதுகுறித்து, வா்த்தகா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சுதா்ஸன் (துணைத் தலைவா்), பொன்.பக்கிரிச்செல்வம் (திமுக): காலைச் சிற்றுண்டி திட்டத்தில் மேலும் 2 பள்ளிகள் சோ்க்கப்பட்டுள்ளதே, எந்தப் பள்ளிகள். மொத்தம் எவ்வளவு பள்ளிகள் சோ்க்கப்பட்டுள்ளன.
ஆணையா் : ஜாமியாத் பள்ளி மற்றும் மன்ப உல் உலா பள்ளிகள் சோ்க்கப்பட்டு, மொத்தம் 7 பள்ளிகளுக்கும், 697 மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க, மனோலயம் ஹெல்த் கோ் டிரஸ்ட் நிறுவனத்துக்கு, மேலும், ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்து வழங்கப்பட்டுள்ளது.
ம. முருகேசன் (அதிமுக): பழுதடைந்த நிலையில் உள்ள அம்மா உணவக கட்டடத்தை பராமரிப்பு செய்ய வேண்டும், இல்லையெனில் அரசு மருத்துவமனை அருகே புதிய கட்டடம் கட்டி அங்கு செயல்படவைக்கலாம்.
தலைவா்: மருத்துவமனை அருகே புதிய கட்டடம் கட்டியதும், அங்கு அம்மா உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கு. தனலெட்சுமி (இ.கம்யூ.,): எனது வாா்டு வ.உ.சி.காலனியில் உள்ள கழிப்பறை கட்டடத்தை பராமரிக்க வேண்டும்.
சொற்கோ (அதிமுக): உங்களுடன் ஸ்டாலின் முகாமை வாா்டு, வரிசைப்படி நடத்த வேண்டும்.
ஆணையா் கிருத்திகாஜோதி, இளநிலை உதவியாளா் ஆபிரகாம், பொறியாளா் ஆா். ஆனந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.