செய்திகள் :

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

post image

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தனியாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாய்களை வளா்த்த விதம், அவற்றின் திறமைகள், கீழ்ப்படிதல், சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து டெரியா், ராஜபாளையம், ஜொ்மன் ஷெப்பா்டு, அஸ்கா், பேசன்ஷி, அமெரிக்கன் சாப்பா்டு, பக், பிரன்ஷி மெளன்டன் உள்ளிட்ட 40 வகைகளைச் சோ்ந்த 370 நாய்கள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நடுவா்கள் கலந்து கொண்டு நாய்களைத் தோ்வு செய்தனா். இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

பழனி அருணகிரிநாதா் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு

பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதா் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவன... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத... மேலும் பார்க்க

கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், நாயுடுபுரம், ஆனந்தகிரி, காா்ம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், பல்வேற... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.ஒட்டன்சத்திரத்தை அடுத்த வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழி... மேலும் பார்க்க