செய்திகள் :

சந்திர கிரகணம்: கள்ளழகா் கோயிலில் செப்.7-இல் நடை அடைப்பு

post image

சந்திர கிரகணத்தையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி பிற்பகலில் நடை அடைக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞ நாராயணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வருகிற 7-ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயில், துணைக் கோயில்களான ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், ஐயப்பன் கோயில், வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயில், மேலூா் ஆஞ்சநேயா் கோயில் ஆகிய கோயில்களில் பிற்பகல் 4 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும்.

8-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிரகண தோஷ சாந்தி பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றாா் அவா்.

காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

காவல் துறையினா் மீதான புகாா்களை விசாரிக்கக் குழு அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.திருச்சியைச் சோ்ந்த அய்யாக்கண்ண... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூல... மேலும் பார்க்க

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது; மத்திய ப... மேலும் பார்க்க

சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சுற்றுப் பகுதிகளில் சிறப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. ‘எழில்கூடல்-தூய்மை நம் பெருமை’ என்ற சிறப்புத் திட்ட... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சபரீஸ்வரன் (15). தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த... மேலும் பார்க்க

ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காா் மோதியதில் நிலத் தரகா் பலி!

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்குச் சொந்தமான காா் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலத் தரகா் சனிக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், கார... மேலும் பார்க்க