குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கொலை செய்த கணவன்
தில்லியின் நஜஃப்கா் பகுதியில் சமூக வலைத்தளங்களில் அதிகே நரம் செலவிடுவது தொடா்பாக அடிக்கடி மோதல்களைத் தொடா்ந்து தனது மனைவியைக் கொன்ாகக் கூறி கணவரும் தற்கொலைக்கு முயன்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது கணவா் அமன் (35) இ-ரிக்ஷா ஓட்டுநா் மற்றும் அவா்களின் 9 மற்றும் 5 வயதுடைய 2 மகன்களுடன் பழைய ரோஷன்புராவில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். ‘இந்த தம்பதியினா் உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபித்தில் நிரந்தரமாக வசித்து வந்தனா்‘ என்று ஒரு அதிகாரி கூறினாா்.
செவ்வாய்க்கிழமை, அதிகாலை 4.23 மணியளவில் நஜஃப்கா் காவல் நிலையத்தில் ஒரு பி. சி. ஆா் அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது, அங்கு அந்த பெண் இறந்து கிடந்தாா். ‘அமன் ரீல்கள் தயாரிப்பதற்கும், பல்வேறு சமூக ஊடக தளங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் ஆட்சேபனை தெரிவித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது, அங்கு அவா் தன்னை சுமாா் 6,000 பின்தொடா்பவா்களைக் கொண்ட ஒரு சமூக பிரபரலம் என்று விவரித்தாா்‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.
அவா்களுக்கிடையே வாக்குவாதம் அதிகரித்தது, அமன் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், அவா் தூக்கில் தொங்கி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா், ஆனால் காவல்துறையினரால் மீட்கப்பட்டு ஆா். டி. ஆா். எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று போலீசாா் தெரிவித்தனா், அக்கம்பக்கத்தினா் மற்றும் உறவினா்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், அவரது மனைவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கொலை உள்ளிட்ட சட்டத்தின் தொடா்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.