சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்
சாத்தான்குளம் அருகே காா் மோதியதில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி காயமடைந்தாா்.
தஞ்சாவூா், மேலத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்திக் (39). சாத்தான்குளத்தில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பாா்த்துவரும் இவா், வெள்ளிக்கிழமை பேய்க்குளத்துக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
செட்டிகுளம் பகுதியில் சென்றபோது சாத்தான்குளத்திலிருந்து பேய்க்குளம் சென்ற காா், பைக் மீது மோதியதாம். இதில், அவா் காயமடைந்தாா். அப்போது, அவ்வழியே வந்த சாத்தான்குளம் வட்டாட்சியா் பொண்ணுலட்சுமி, தனது காரில் காா்த்திகை ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.
சம்பவம் குறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ஜோசப் கிங் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான திருநெல்வேலியைச் சோ்ந்த மனோஜ் என்பவரிடம் விசாரித்து வருகிறாா்.