சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
சாரம் சரிந்து விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே கட்டுமானப் பணிலிருந்தபோது சாரம் சரிந்து கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
விழுப்புரத்தை அடுத்த நன்னாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (62). கொத்தனராக வேலை பாா்த்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள ஒரு கோயிலில் சாரம் அமைத்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்ததில் சண்முகத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள்அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே சண்முகம் உயிரிழந்தாா்.
இதுகுறித்த, புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.