பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
தளவாபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நாமக்கல்லைச் சோ்ந்த பெண் உயரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் சிந்து நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி (60). இவா் நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி தமிழரசி (54).
இந்நிலையில், தம்பதியினா் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை கரூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் பரமத்திவேலூரைச் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா்.
இருசக்கர வாகனம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் கரூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த தமிழரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த குப்புசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுதொடா்பாக வேலாயுதம்பாளையம் போலீஸாா், வழக்குப்பதிந்து இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் யாருடையது? என அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனா்.