5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
நாகா்கோவில் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, தெற்கு சூரங்குடியைச் சோ்ந்தவா் நடராஜன் (61), தொழிலாளி. இவா், கடந்த 2017இல் தனது வீட்டின் அருகில் வசித்த 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்ததாக ஈத்தாமொழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கு நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சுந்தரையா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி நடராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
எஸ்.பி.பாராட்டு: நீதிமன்ற வழக்கு விசாரணை, சாட்சிகள் விசாரணை மூலம் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்குரைஞா், நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா், ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.