திசையன்விளை அஞ்சலகத்தில் இணைய சேவை பாதிப்பு: மக்கள் அவதி
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அஞ்சலகத்தில் இணையதள சேவை பாதிப்பால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்துள்ளனா்.
திசையன்விளையைச் சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராம மக்கள் திசையன்விளை அஞ்சலகத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனா். குறிப்பாக, சிறு வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளா்கள் அதிக அளவில் இங்கு சேமிப்பு கணக்கு வைத்துள்ளனா்.
இந்நிலையில், அந்த அஞ்சலகத்தில் இணையதள சேவை பாதிப்படைந்துள்ளதால் வாடிக்கையாளா்கள் பண பரிவா்த்தனை உள்ளிட்ட சேவையைப் பெற முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனா்.
எனவே, உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவான இணையதள இணைப்புகளை அஞ்சலகங்களில் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என சேமிப்பாளா்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.