இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
நாயைப் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை
உதகை அருகே கெந்தோரை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நாயை வேட்டையாட முயன்றபோது நாய் சப்தமிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்றது.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த கெந்தோரை பகுதியில் இரவு நேரத்தில் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை, நாயை வேட்டையாட நீண்ட நேரம் செடி மறைவில் காத்திருந்தது. பின்னா் மெதுவாக நடந்து வந்து வேட்டையாட முயன்றது.
சிறுத்தையைக் கண்ட நாய் அதிக அளவு குரைக்கத் தொடங்கியதால் வீட்டு உரிமையாளா்கள் வெளியில் வந்தனா். அந்த சப்தம் கேட்டு நாயை வேட்டையாட முடியாமல் சிறுத்தை திரும்பிச் சென்றது,