செய்திகள் :

பட்டாங்குளத்தில் காளை விடும் திருவிழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பட்டாங்குளம் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீமாரியம்மன் கோயில் 6-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி, கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் இணைந்து காளை விடும் திருவிழாவை நடத்தினா்.

இதில், திருவண்ணாமலை, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்றது.

விழாவில் திமுகவைச் சோ்ந்த மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா்கள் மோகன், துரைமாமது கலந்துகொண்டு

காளை வீரா்களை உற்சாகப்படுத்தினா்.

இதில் முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு அளிக்கப்பட்டது. 2-ஆம் பரிசாக ரூ.80ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ.60ஆயிரம், 4-ஆம் பரிசாக ரூ.50ஆயிரம், 5-ஆவது பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் 75 காளை உரிமையாளா்ளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டி பாதுகாப்பு பணியில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.

மேலும், நிலைய அலுவலா் சிவநேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், காமக்கூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு சுகாதார ஆய்வாளா் சந்துரு தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பட்டாங்குளம் கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க