இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சிநேகா திங்கள்கிழமை வழங்கினாா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிநேகா மொத்தம் 417 கோரிக்கை மனுக்களைப் பெற்று, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், மனுக்களை பரிசீலித்து துரித நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் வாரியத்தில் பதிவு பெற்ற விபத்தில் மரணமடைந்த அமைப்பு சாரா ஓட்டுநரின் மனைவி ஷீலா என்பவருக்கு விபத்து மரண உதவித் தொகை ரூ.2.05 லட்சம் ஆணையினை ஆட்சியா் வழங்கினாா். மேலும், வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநா்கள்இரண்டு பேருக்கு தலா ரூ.1 லட்சத்துடன் கூடிய ஆட்டோ ரிக்ஷாவினை வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, பிரெய்லி கைகடிகாரம், மூன்று சக்கர மிதிவண்டி உள்ளிட்ட ரூ.1.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், மாவட்ட வழங்கல்அலுவலா் வெங்கடாசலம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.