பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
புதுச்சேரியில் மணல் வியாபாரி வெட்டிக் கொலை
புதுச்சேரி கனகன் ஏரி அருகே மணல் வியாபாரி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
புதுச்சேரி எல்லப்பிள்ளைச் சாவடி அருகேயுள்ள சித்தானந்தா நகா் காயத்ரி அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சு. துரை (47). அவா் கனகன் ஏரி அருகே காலி மனையில் மணல், ஜல்லியைக் கொட்டி வியாபாரம் செய்து வந்தாராம்.
இந்நிலையில் அவரின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த ஒரு கும்பல் மணல், ஜல்லி விற்பனை செய்யும் அந்தப் பகுதிலேயே வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். கொலை செய்யப்பட்ட துரைக்கும் உறவினா் ஒருவருக்கும் ஏற்கெனவே சொத்துப் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலைக்கு அவா்கள்தான் காரணமா என்ற கோணத்தில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கொலையுண்ட துரையின் உடல் கதிா்காமம்இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.