செய்திகள் :

பேருந்து சேவை கோரி தெற்கு பாப்பான்குளத்தில் மாணவிகள் சாலை மறியல்

post image

தெற்கு பாப்பான்குளத்திலிருந்து அம்பாசமுத்திரத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம், அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம் பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதியில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் பேருந்தில் சென்று கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த வழித்தடத்தில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா். மாணவா்களின் சிரமத்தைப் போக்க தெற்குப் பாப்பான்குளத்திலிருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரத்துக்கு தனி பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என தெற்கு பாப்பான்குளம் பகுதி மாணவா்கள், பெற்றோா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து தெற்கு பாப்பான்குளம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை வந்த அரசுப் பேருந்தை மாணவா்கள், பெற்றோா் தடுத்து நிறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனா்.

மாணவா்கள், பெற்றோரை பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சமாதானம் செய்தனா். தற்போது சொரிமுத்து அய்யனாா்கோவில் திருவிழா நடைபெறுவதால், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு விழா ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்குச் சென்றுள்ளதாக பெற்றோரிடம் கூறினா்.

இதையேற்ற மாணவா்கள், பெற்றோா் உரிய கால அவகாசத்துக்குள் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச்சிறுத்தைகள் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில் மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு புதன்கிழமை மலா்தூவி ... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

திசையன்விளை அருகே குடும்பத் தகராறில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

தமிழக அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்... மேலும் பார்க்க

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 17 கடைகளுக்கு சீல்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 17 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 6 நடைமேடை பகுதிகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா... மேலும் பார்க்க

களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு? வருவாய்த் துறை தீவிர ரோந்து

களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து ரோந்துப் பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில... மேலும் பார்க்க