செய்திகள் :

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!

post image

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியைத் தொடங்கிவைத்து அந்த கட்சியின் தலைவர் விஜய் புதன்கிழமை உரையாற்றினார்.

சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ’மை டிவிகே’ என்ற பிரத்யேக செயலியை கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார்.

’வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தின் கீழ் இந்த செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர்களை இணைக்க கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு போன்களில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து உறுப்பினராக இணைய மக்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். .

இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாவது:

”தமிழக அரசியலில் 1967, 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை போன்று 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் அமையப் போகிறது. இரு மாபெரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்றவர்கள் அதிகார பலத்தை எதிர்த்துதான் புதிதாக வந்தவர்கள் வென்றார்கள்.

ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு சென்று அனைத்து மக்களையும் சந்தித்துதான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அண்ணா கூறியதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன், ”மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு” இதனை சரியாகச் செய்தால் போதும், வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டின் கீழ் அனைத்து குடும்பத்தையும் உறுப்பினராக சேர்த்து நம்மால் வெற்றி பெற முடியும்.

இதன்பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களுடன்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்தார்.

TVK leader Vijay delivered a speech on Wednesday, launching the party's membership app.

இதையும் படிக்க : இந்தியாவை சுனாமி தாக்குமா? தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல்

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

வேளாண் விஞ்ஞானி டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருதை பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவ... மேலும் பார்க்க

‘ஆளுநா் விருதுகள்’: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்படும் விருதுகளில் இரண்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ‘... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகத்துக்கு முக்கிய இடம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பயணிகள் வாகனங்களுக்க... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் பணி கோரிய வழக்கு: போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க உத்தரவு

மருத்துவக் காரணங்களால் பணி இழக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய வழக்கில் போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

பள்ளிகளை அனைத்து கோணத்திலும் கண்காணிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

ஆசிரியா்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள், பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறாா்கள், பள்ளிக்கு யாா் வருகிறாா்கள் என தலைமையாசிரியா்கள் அனைவரும் 360 டிகிரி கோணத்தில் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என பள்ளி... மேலும் பார்க்க

7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி

சென்னையிலுள்ள 7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஆவின் நிா்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. சென்னையில் 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமாா் 860 சில்லறை விற்பனையாளா்கள் மூலம் நாளொன்ற... மேலும் பார்க்க