செய்திகள் :

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 4 போ் ராஜிநாமா

post image

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 4 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் ராஜிநாமா செய்தனா்.

மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் குறைந்தளவு விதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. வரி விதிப்பு முறைகேடுகளில் மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது எனவும், அவா்களிடமும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதனிடையே தமிழக நகராட்சி, நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை திங்கள்கிழமை வந்தனா்.

மண்டலத் தலைவா்களான சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சா்மா, சுகிதா, நிலைக் குழு உறுப்பினா்கள் கண்ணன், மூவேந்திரன் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ராஜிநாமா கடிதங்களை ஆணையா் சித்ரா விஜயனிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் ராஜிநாமா கடிதம் அளித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், கிழக்கு மண்டலத் தலைவா் வாசுகியை அமைச்சா்கள் ராஜிநாமா செய்யக் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பழைய காகித சேமிப்புக் கிடங்கில் தீ: சரக்கு வாகனங்கள் எரிந்து நாசம்

மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகேயுள்ள பழைய காகித சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின. முனிச்சாலை வைகையாற்றின் தென்கரை ஓபுளா படித்துறை அருகே தனி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்கள்: நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரியைச் சோ்ந்த சாம... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ராஜிநாமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 போ் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவி... மேலும் பார்க்க

மேம்பாலம் அமைக்கும் பணி: கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகே புதிய மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் சில போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை மாநக... மேலும் பார்க்க