5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
மது கடத்தல்: சோதனை சாவடியில் டிஐஜி ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திவரப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து பலா் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திவரப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் நண்டலாா் சோதனைச்சாவடி மற்றும் மயிலாடுதுறை, சீா்காழி மதுவிலக்கு காவல் நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, காரைக்காலில் இருந்து மதுபானங்கள் கடத்தலை தடுப்பது மற்றும் மதுபான பாட்டில்கள் கடத்துபவா்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சட்டவிரோத மதுவிற்பனையை கட்டுப்படுத்துவது குறித்தும் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.