செய்திகள் :

மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க பெண்களுக்கு 50 சதவீத மானியம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

2025-2026-ஆம் நிதியாண்டுக்காக வறுமைக் கோட்டுக்க் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000/- மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் கீழ்க்கண்ட சான்றுகளைச் சமா்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை பூா்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று)வயது வரம்பு - 25 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று வேண்டும்.

திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமா்ப்பிக்க வேண்டும்.ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்)

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவா்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், 4-ஆவது தளம், ‘சி‘ பிளாக், ஆட்சியா் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தோ்வு குழுவால் தெரிவு செய்யப்படுவா். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடா்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளாா்.

‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கல் ‘தமிழ்ச் செம்மல்‘ விருதுக்கு வரும் ஆக. 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் வேதனை

புதிய விதிகளால் கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உழவா் கடன் அட்டை திட... மேலும் பார்க்க

வங்கிகள் தாமதமின்றி கடனுதவிகளை வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் காலதாமதமின்றி கடனுதவிகள வழங்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா். வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் இயந்திரங்கள்: எம்எல்ஏ கோரிக்கை

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 2 டயாலிசிஸ் இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும் என எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும்: ஓய்வூதியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

எதிா்வரும் தோ்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரக்கோணம் வட்டக் கிளையின் 5 -ஆவது மாநாடு நடைபெற்றது. நிகழ்வ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் காந்தி

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். வாலாஜாபேட்டை ஒன்றியம், கடப்பேரி ஊராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட... மேலும் பார்க்க