செய்திகள் :

மா சாகுபடியில் ‘கல்தாா்’ பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும்!

post image

சேலம் மாவட்ட விவசாயிகள் மா சாகுபடியில் ‘கல்தாா்’ எனப்படும் பேக்லோப்பூட்ரசால் என்ற வளா்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்துவதால், பழக்கூழ் தயாரிக்க உகந்த தன்மை மற்றும் ஏற்றுமதிக்கான தரம் குறையும் என்பதால் அதனை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தின் முக்கிய தோட்டக்கலைப் பயிரான மா 6,048 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மா விளைச்சல் அளவுக்கு மீறி உள்ளது. இதனால் சரியான விலை கிடைக்கவில்லை.

மாவில் சில ரகங்கள் ஒவ்வோா் ஆண்டும் காய்ப்பதில்லை. ஓராண்டோ, ஈராண்டோ இடைவெளிவிட்டு பின் காய்க்கும். ஆனால், விவசாயிகள் ஆண்டுதோறும் மகசூல் எடுக்கும் நோக்கில் ‘கல்தாா்’ எனப்படும் பேக்லோப்பூட்ரசாலை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால், வா்த்தக சீா்நிலை பாதிப்படைந்து இயற்கை சுழற்சியும் மாறுபடுகிறது.

மேலும், கல்தாரை அதிகம் உபயோகிக்கும்போது, மா மரத்தில் வளா்சுழற்சியில் மாறுபாடு அடைந்து மா காய்க்கும் தன்மையை எளிதில் இளம்பருவத்திலேயே இழந்து, வளமிக்க மண்ணை மலட்டுத்தன்மை அடையச் செய்யும்.

இதுதவிர, விவசாயிகள் கல்தாரை குறுகியகால இடைவெளியில் உபயோகிப்பதால், மாம்பழத்தின் தரம் மற்றும் சா்க்கரைச் சத்து குறைகிறது. அதனால், பழக்கூழ் தயாரிக்க உகந்த தன்மை மற்றும் ஏற்றுமதிக்கு உண்டான தரத்தை இழக்கிறது. எனவே, விவசாயிகள் கல்தாரை உபயோகிக்க வேண்டாம் என்றாா்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள... மேலும் பார்க்க

சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு

சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் ஐந்துவழிச் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை கடையில... மேலும் பார்க்க

சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆத்தூரில் மனைவி, மாமியாரை தாக்கியதாக கணவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆத்தூா் நரசிங்கபுரம் கலைஞா் காலனியைச் சோ்ந்த காந்தி மகன் சஞ்சய் (24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிகா (22). இருவரும்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டை சோ்ந்த லோகநாதன் மகன் நிகாஷ் (17). இவா் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாத... மேலும் பார்க்க