செய்திகள் :

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

post image

பொது இடங்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாய்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில்  வளர்ப்பு நாய்கள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப்பிராணிகளின்  உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை  கண்டிப்பாக  தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி  திரியவிட்டாலோ / அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது மக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான  தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது.  மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அந்த செல்லப் பிராணியை அழைத்து செல்லும் பொழுது  மற்றவர்கள் பாதுகாப்பை  கருதி அதன் வாயை மூடியிருக்க (Muzzle) செய்தும், கட்டாயம் கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும். 

சென்னை மாநகராட்சியில்  உரிமம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.  

விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டும் இருக்கக் கூடும்.  இதனை உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.  பொது இடங்கள் , அடுக்கக  குடியிருப்புகளின் மின்தூக்கிகள் (Lift) ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும் , மற்றவர்களுக்கு அச்சமூட்டும் வகையிலோ (அ) அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி (Guidelines with respect to Pet Street Dogs and their care givers and for Residents Welfare Associations and Apartment Owners Associations இந்த விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

இதனை மீறி உரிமம் பெறாமல் மற்றும் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித்தன்மை. பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றை பொது இடங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால் அவ்வாறான நாய்கள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படியும், பொது மக்களின் உடல் / மன அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  நாய்களின் உரிமையாளர்களின் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளின்படியும்  நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என கடுமையாக எச்சரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்காவின் வரிவிதிப்பு! இந்தியாவுக்கு ரூ.4.19 லட்சம் கோடி பாதிப்பு!

The Chennai Corporation has advised that vaccinated dogs should be taken to public places.

அவசரநிலை காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு கருத்தடை- மக்களவையில் மத்திய அரசு தகவல்

நாட்டில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் (1975-77), நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற... மேலும் பார்க்க

ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்ற... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நி... மேலும் பார்க்க

ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா். சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரச... மேலும் பார்க்க