``88 வயதில் தெருவை சுத்தம் செய்யும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி" - ஆனந்த் மஹிந்திராவின் பதிவு வைரல்!
1964-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் இந்தர்ஜித் சிங் சித்து. தற்போது இவருக்கு 88 வயது ஆகிறது. இந்த வயதிலும் காலை 6 மணி முதல் சண்டிகர் நகரை தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை செய்கிறார். இவர் தொடர்பான காணொளியை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ``எனக்கு பகிரப்பட்ட இந்த கிளிப் சண்டிகரின் ஸ்ரீ இந்தர்ஜித் சிங் சித்துவைப் பற்றியது. சண்டிகரின் செக்டார் 49-ன் அமைதியான தெருக்களில், தினமும் காலை 6 மணிக்கு, இந்த 88 வயதான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி தனது சேவையைத் தொடங்குகிறார்.
ஒரு சைக்கிள், அசைக்க முடியாத கடமை உணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லாமல், அவர் மெதுவாக நகர்ந்து, சாலையோரத்தில் இருந்து குப்பைகளை எடுக்கிறார்.
This clip which was shared with me is about Shri Inder Jit Singh Sidhu of Chandigarh.
— anand mahindra (@anandmahindra) July 22, 2025
Apparently, every morning at 6 AM, in the quiet streets of Chandigarh’s sector 49, this 88-year-old retired police officer begins his day in service.
Armed with nothing but a cycle cart and… pic.twitter.com/pkDlptoY8f
சண்டிகர் ஸ்வச் சுரேக்ஷன் எனும் பட்டியலில் இடம் பெற்றதில் அவர் மகிழ்ச்சியடையவில்லை. புகார் செய்வதற்குப் பதிலாக, அவரே நடவடிக்கையில் இறங்குகிறார். வயதையோ, அங்கீகாரத்தையோ பொருட்படுத்தாமல் அர்த்தத்துடன் வாழ்வதில் ஒரு நம்பிக்கை.
இளமையும் வேகமும் பெரும்பாலும் வெறித்தனமாக இருக்கும் உலகில், இவரின் அமைதியான ஆனால் நிலையான அடிச்சுவடுகள், ஒருவரின் இலக்கு எப்போதும் ஓய்வு பெறுவதில்லை, சேவைக்கு எப்போதும் வயது முக்கியமில்லை என்பதை நமக்குச் சொல்கின்றன. இந்த அமைதியான போர்வீரனுக்கு ஒரு சல்யூட்." எனப் பகிர்ந்திருக்கிறார்.