எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
Karnataka: `ரூ.14 கோடியில் புதிய கட்டடம்’ - படித்த அரசுப் பள்ளியை புதுப்பித்துக் கொடுத்த மருத்துவர்
ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவர் ரூ.14 கோடி கோடி செலவில் தான் படித்த அரசுப் பள்ளியை நவீன முறையில் கட்டிக்கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் டாக்டர் எச்.எம். வெங்கடப்பா. 79 வயதான இவர் 1949 முதல் 1957 வரை ஹொங்கனூரில் உள்ள அரசு பள்ளியில் படித்திருக்கிறார்.

ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த வெங்கடப்பா, மருத்துவராகி, அரசு பணியில் இருந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு இவர் தான் படித்த அரசு பள்ளிக்கு ஒருமுறை சென்றிருக்கிறார்.
4.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த பள்ளி, அதே ஆண்டு ஜூனில் முழுமையாக இடிக்கப்பட்டிருக்கிறது. பின் இரண்டரை ஆண்டுகளில், அந்த இடத்தில் இரண்டு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இதற்கான 14 கோடி ரூபாய் செலவை டாக்டர் வெங்கடப்பா, தனது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து வழங்கி இருக்கிறார்.
50 விசாலமான வகுப்பறைகள், கணினிகள், ஸ்மார்ட்போர்டுகள், விஞ்ஞானம் மற்றும் கணித ஆய்வகங்கள், நூலகம் மற்றும் முழுமையான விளையாட்டு வசதிகள் அந்தப் பள்ளியில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் டாக்டர் எச்.எம். வெங்கடப்பா தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில், “ கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள் தரமான கல்வியை இலவசமாகப் பெற வேண்டும் என்பதற்காகவே நான் இந்தப் பள்ளியைக் கட்டி நவீனமாக மாற்றி இருக்கிறேன்.

தற்போது இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை, கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர் சேர்க்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது” என்று நெகிழ்வாகப் பேசியிருக்கிறார்.
மேலும், பள்ளி பராமரிப்பிற்காக ஆண்டுதோறும் 10 லட்ச ரூபாய் வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.