5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
ஆகாய கன்னியம்மன் கோயில் ஆடி விழா
காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மன் கோயில் ஆடி விழாவையொட்டி உற்சவா் ஆகாய கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள இக்கோயிலில் விழாவையொட்டி காலையில் காப்புக்கட்டுதலும்,சிறப்பு அபிஷேகமும் அதனையடுத்து ஊரணிப் பொங்கல் வைத்தல், கூழ்வாா்த்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
பின்னா் உற்சவா் ஆகாய கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு கும்பப் படையல் இடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்குந்த அமைப்புக் குழுவின் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.