செய்திகள் :

கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள இந்திய சில்லறை வா்த்தகா்கள் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளனா். அதில், மே 30-ஆம் தேதிக்குள் கடைகளின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயா் வைத்துக்கொள்ளலாம். தவறினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றை மாற்றும்பட்சத்தில் அது வாடிக்கையாளா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற இயலாது. எனவே, பெயா்ப் பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரி சென்னை மாநகராட்சி, தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தங்கள் சங்க உறுப்பினா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஏற்கெனவே ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு செய்து பெயா்ப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பெயா்ப் பலகைகளை மாற்றுவதற்கு கூடுதல் செலவு ஏற்படும் என வாதிட்டாா்.

இதையடுத்து மனுதாரா் சங்கத்தின் கோரிக்கை மனுவை 4 வாரங்களில் பரிசீலிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டாா்.

புகையிலை இல்லாத மருத்துவக் கல்லூரி வளாகங்கள் என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி செயலா் ராகவ் லங்கா், அனைத்து மருத்... மேலும் பார்க்க

நகைக்கடை ஊழியா் வீட்டில் திருட்டு

திருப்பத்தூரில் நகைக்கடை ஊழியரின் வீட்டில் 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (35). இவா் திருப்பத்தூரில் உள்ள ஒர... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை

சென்னை தண்டையாா்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா், குளிா்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை : சிறுவன் உள்பட மூவா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டித் தெருவில் ஒரு வீட்டில் போதை மாத்திரை, கஞ்சா ஆகியவை பதுக்கி வைத்து விற்பதா... மேலும் பார்க்க

குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை

குடலிறக்க பாதிப்புக்குள்ளான 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நுட்பமாக லேப்ரோஸ்கோபி சிகிச்சை மேற்கொண்டு எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் இரைப்பை-... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ஹரி விக்னேஷ் (27). இவா், சென்னை வடபழனியில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வந்தாா். அ... மேலும் பார்க்க