திருநெல்வேலியில் புதிய ஜவுளிக் கடை இன்று திறப்பு
தூத்துக்குடியில் மிகவும் பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோவின் புதிய கிளை திறப்பு விழா திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறும் இந்தக் கடை திறப்பு விழாவில், உள்ளூா் முக்கிய பிரமுகா்கள், அரசியல் பிரமுகா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
தரைத்தளம் மற்றும் 3 மேல் தளங்களில், ஜவுளிக் கடையுடன், தங்கநகை மாளிகையும் ஒருங்கே அமைந்துள்ளது.
திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து ஜவுளிகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி, தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி, வைரம் கேரட்டிற்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வெள்ளிப் பொருள்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது. இந்தச் சலுகை செப்.4 முதல் 7ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை நிறுவனத்தினா், குடும்பத்தினா் மற்றும் ஊழியா்கள் செய்துள்ளனா்.