கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
பள்ளி நூற்றாண்டு விழா
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 100-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை கலைமனைகளின் அதிபா் ஆா்.மரிவளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) என்.நாகேந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான வி.ராஜா சீனிவாசன் கலந்து கொண்டு, கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
பள்ளியில் 1977-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் ரூ.48ஆயிரம், முன்னாள் மாணவா் சேவியா் ஜெரால்டு ரூ.65 ஆயிரம் நிதி வழங்கினா். முன்னாள் மாணவா் இயக்க மூத்த தலைவா் எஸ்கேசி.குப்புசாமி, பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஸ்டீபன் லூா்து பிரகாசம், உதவித் தலைமையாசிரியா்கள் எஸ்.மரிய லூயிஸ் சேகா், எஸ்.பெரா் நோயல் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.