US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...
மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்கச் சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு
மகனின் திருமண அழைப்பிதழை உறவினா்களுக்கு கொடுப்பதற்காக சென்றபோது இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி பகுதியை சோ்ந்த ராமமூா்த்தி- செல்லியம்மாள் தம்பதிக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் திருமாலுக்கு செப்டம்பா் 4 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமண அழைப்பிதழை உறவினா்களுக்கு கொடுப்பதற்காக புதன்கிழமை செல்லியம்மாள் (47) தனது இளைய மகன் திருமூா்த்தியுடன் (25) இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
அரூா்- தருமபுரி நெடுஞ்சாலையில் சோலைக்கொட்டாய் அருகே சென்றபோது வாகனத்திலிருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த செல்லியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், செல்லியம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.