யோகாசனம், சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை
ஆற்காடு வித்யா மந்திா் பள்ளியில் 4 மாவட்டங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் பங்கேற் முதலிடம், 3 மாணவிகள் இரண்டாம் இடம், 4 மாணவிகள் மூன்றாம் இடம் மற்றும் சிறந்த கல்லூரிக்கான விருதினை பெற்று சாதனை படைத்தனா்.
இதே போல் மாநில அளவிலான திறந்தவெளி சிலம்பம் போட்டிகள் வாணியம்பாடி அருகே சின்னகல்லுபள்ளியில் நடைபெற்றது. அதில் ஒற்றை கம்பு, இரட்டைகம்பு, கம்புச்சண்டை, வேல்கம்பு, மான்கொம்பு போட்டிகள் நடைப்பெற்றது. இதில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் 9 மாணவிகள் முதலிடமும், 5 மாணவிகள் இரண்டாம் இடமும், 9 மாணவிகள் மூன்றாம் இடமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கோப்பையும் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. யோகாசனம், சிலம்பப் போட்டியில் சாதித்த மாணவிகளை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, முதல்வா் ம.இன்பவள்ளி, பேராசிரியா்கள், மாணவிகள் பாராட்டினா்.