செய்திகள் :

லஞ்சம் கொடுத்து ரூ.3000 கோடி கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானி அலுவலகம் உட்பட 35 இடங்களில் ED ரெய்டு!

post image

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி ஒரு நேரத்தில் உலக அளவில் பெரிய கோடீஸ்வரராக இருந்தார். ஆனால் தவறான நிர்வாகத்தால் அவரது பெரும்பாலான கம்பெனிகள் திவாலானது. ரிலையன்ஸ் கம்ப்யூனிகேசன் வாங்கிய கடன்களை திரும்ப கொடுக்கவில்லை. இதற்காக சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் அனில் அம்பானி மீது மோசடி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. தற்போது அனில் அம்பானியிடம் ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா போன்ற நிறுவனங்கள் மட்டுமே கையில் இருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் கடனால் மூடப்பட்டுவிட்டது. அல்லது அக்கம்பெனிக்கு கடன் கொடுத்த வங்கிகள் அனில் அம்பானியின் கம்பெனியை பிடுங்கி ஏலத்தில் விட்டுள்ளது.

இந்நிலையில் யெஸ் வங்கியில் இருந்து ரூ.3000 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் கம்பெனி கடன் வாங்கியது. இக்கடனை ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டது. 2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் ரூ.3000 கோடியை கடன் வாங்கியது. யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போதிய ஆவணங்கள் இல்லாமல் கடன் வாங்கப்பட்டுள்ளது. கடன் கொடுக்க யெஸ் வங்கி நிர்வாகிகள், உரிமையாளர்களும் தேவையான உதவி செய்துள்ளனர். கடன் வாங்க தனிப்பட்ட முறையில் யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதை சி.பி.ஐ. சமீபத்தில் கண்டுபிடித்து நிதி முறைகேடு தொடர்பாக இரண்டு வழக்குகளை பதிவு செய்தது.

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் கம்பெனியில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து செபி அமைப்பும் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து இருந்தது. சி.பி.ஐ வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலையில் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது தொடர்பாக 25 பேரிடம் விசாரணை நடத்தினர். அதோடு இம்மோசடியில் தொடர்புடைய 50 நிறுவனங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

இந்த ரெய்டு 35 இடங்களில் நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் அனில் அம்பானியின் வீடு இடம் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அனில் அம்பானியின் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அமலாக்கப் பிரிவின் ஆரம்பக்கட்ட விசாரணையில் அனில் அம்பானி குரூப் மிகவும் திட்டமிட்டு வங்கியையும், முதலீட்டாளர்களையும் ஏமாற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தேவையான விண்ணப்பங்கள் தாக்கல் செய்வதற்கு முன்பு கடன் தொகையை வழங்கியது, முன் தேதியிட்டு கடனுக்கு ஒப்புதல் கொடுத்தது, கம்பெனி இதற்கு முன்பு வாங்கிய கடன்கள் குறித்து எந்த வித விசாரணையும் நடத்தாமல் விட்டது என கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இது தவிர வருமான வரித்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் அனில் அம்பானிக்கு எதிராக அன்னிய செலாவனி மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேங்க் ஆஃப் பரோடா, தேசிய ஹவுசிங் பேங்க் போன்றவையும் அனில் அம்பானி குரூப்பிற்கு எதிராக தங்களது தரப்பு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே அமலாக்கப் பிரிவு இந்த ரெய்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ரெய்டு குறித்து அனில் அம்பானி நிறுவனமான ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள ரெய்டு எங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் கம்பெனிக்கு எதிரான புகார்கள் 10 ஆண்டுகளுக்கு முந்தியவை... இந்த நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராவிற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனில் அம்பானிக்கு எதிராக இந்த அளவுக்கு ரெய்டு நடத்தப்பட்டதில்லை. இதனால் அனில் அம்பானி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் இந்த ரெய்டை தொடர்ந்து ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா பங்குகள் இன்றைய பங்குச்சந்தையில் 5 சதவீதம் வரை சரிந்தது.

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க

திருச்சி: கோயில் திருவிழாவில் வாண வெடி வெடித்து குழந்தை பலி; தாய் படுகாயம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.இவர்களுக்குத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்தி... மேலும் பார்க்க