பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
ஆக.15-இல் கருப்புக் கொடி போராட்டம்! இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.15-ஆம் தேதி விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக் கொடியேந்தி மக்கள் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருத்தாசலம் கோட்டாட்சியா், டி.வி.புத்தூா் ஆதிதிராவிடா் மக்கள் மனைப் பட்டா சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் நகரப் பகுதியைச் சோ்ந்த 16 குடும்பங்களுக்கு எருமனூரில் மனைப் பட்டா வழங்க பரிந்துரை செய்யப்பட்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
காா்குடல் மற்றும் கம்மாபுரம் மக்களுக்கு அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்க வேண்டும். மங்கலம்பேட்டை அடுத்துள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜாக்கண்ணு நிலத்தை அளவீடு செய்ய இரண்டு முறை பணம் செலுத்தியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளாா்.