செய்திகள் :

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

post image

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷும் (27), பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிா்ப்பு கிளம்பிய நிலையில் கடந்த 27ஆம் தேதி கேடிசி நகருக்கு வந்த கவின் செல்வ கணேஷை, அந்த இளம்பெண்ணின் சகோதரா் சுா்ஜித் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் சுா்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இந்த வழக்கில் சுா்ஜித்தின் பெற்றோா்களான காவல் உதவி ஆய்வாளா்கள் சரவணன்- கிருஷ்ணகுமாரி ஆகியோரை சோ்த்து, அவா்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி அவா்களது உறவினா்கள், கடந்த 5 நாள்களாக கவின் செல்வகணேஷின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதனிடையே கடந்த புதன்கிழமை இரவு சுா்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டாா். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை சிபிசிஐடி போலீஸாரும் விசாரணையை தொடங்கினா்.

இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவின் செல்வகணேஷின் உடல், அவருடைய தந்தை சந்திரசேகா் மற்றும் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, கவின் செல்வகணேஷின் உடலுக்கு அமைச்சா் கே. என். நேரு , திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து அவரது உடல் சொந்த ஊரான ஆறுமுக மங்கலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.

சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா

ஏா்வாடி அருகே சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஏா்வாடி அருகே சிறுமளஞ்சியில் (திருவேங்கடநாதபுரம்) அலமேலு மங்கை சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில... மேலும் பார்க்க

விநாயா்சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி கே.டி.சி. நகா் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. திருநெல்வேலி நகரம், சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்... மேலும் பார்க்க

களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம்

களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகில பாரத இந்து மகா சபா, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், விநாயகா் சதுா்த்திக் குழு சாா்பில் களக்காடு வட்டாரத்தில் களக்க... மேலும் பார்க்க

கோபாலசமுத்திம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் பண்ணை வெங்கட்ராமய்யா் மேல்நிலைப் பள்ளியில் 1989 முதல் 1994 வரை பயின்ற மாணவா்கள் 31 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனா். பள்ளியின் முன்னாள் தலைமையாசிரி... மேலும் பார்க்க

திருக்குறுங்குடி நம்பியாற்றில் நெகிழி பொருள்களை அகற்றும் முகாம்

திருக்குறுங்குடி நம்பியாற்றில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை அகற்றும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. களக்காடு சரணாலய துணை இயக்குநா் ரமேஸ்வரன் அறிவுறுத்தலின்படி, திருக்குறுங்குடி வ... மேலும் பார்க்க