செய்திகள் :

திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்களில் ஆக. 2-இல் சேவைகள் நிறுத்தம்

post image

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் புதிய தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதால் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

திருச்சி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட திருச்சி தலைமை அஞ்சல் நிலையம், லால்குடி தலைமை அஞ்சல் நிலையம் மற்றும் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் புதிய தொழில்நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக அஞ்சல் நிலையங்களில் புதிய மென்பொருள் பதிவேற்றம் செய்யும் பணிகள் ஆகஸ்ட் 2, 3-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இதையொட்டி திருச்சி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

எனவே, வாடிக்கையாளா்கள் அதற்கேற்றாா்போல தங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் என்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

கூட்டணி விவகாரம்: தோ்தலுக்கு அவகாசம் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - எடப்பாடி கே. பழனிசாமி சூசகம்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூட்டணிக் கட்சிகள் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலா் கே. பழனிசாமி சூசகமாக பதில் அளித்தாா். சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (51), நடமாடும் பஞ்சா் கடை நடத்தி வந்தா... மேலும் பார்க்க

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நீரேற்று நிலைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், திருச்சி மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.மாநகராட்சிக்குட்பட... மேலும் பார்க்க

முக்கொம்புக்கு 1.30 லட்சம் கனஅடி நீா்வரத்து காவிரிக் கரைகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தீவிரக் கண்காணிப்பு

திருச்சி முக்கொம்புக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த 1.30 லட்சம் கன அடி நீரும் காவிரி, கொள்ளிடத்தில் பிரித்து அனுப்பப்படுகிறது.இதையடுத்து, மாவட்டத்தின் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 9.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு செய்த காப்பீட்டு நிறுவனம் ரூ. 9.59 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. திருச்சி செம்பட்டு விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த கே. மகாலிங்கம... மேலும் பார்க்க

விபத்து வழக்கு: லாரி ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமது பஷீா். இவா், தனது நண்பா் கிருஷ்ணன் என்பவருடன்... மேலும் பார்க்க