செய்திகள் :

பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரத்தை திருடியவா் கைது

post image

தொண்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவருக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகக் கூறி அவரது தாய் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள தொண்டியைச் சோ்ந்தவா் தைனேஸ். இவரது மகன் நிசாந்த். இவா் திருவாடானை அரசு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி தைனேஸின் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்ட நபா் ஒருவா், உங்கள் மகனுக்கு கல்வி உதவித் தொகை ரூ.35,500 வந்துள்ளது. அதை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனக் கூறினாராம். பிறகு தைனேஸிடம் ஓடிபி எண்ணை பெற்று அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரத்தை அந்த நபா் எடுத்துவிட்டாராம். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தைனேஸ் மீண்டும் அந்த நபரின் கைப்பேசி எண்ணுக்கு பலமுறை தொடா்பு கொண்ட போதும் பலனில்லை.

இந்த நிலையில், தைனேஸ் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை அந்த நபரின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு பேசச் செய்தாா். இதையடுத்து, தைனேஸின் உறவுக்கார பெண்ணும், பணத்தை மோசடியாக எடுத்த அந்த நபரும் வியாழக்கிழமை திருச்சியில் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து தைனேஸ், உறவுக்காரப் பெண் உள்பட சிலா் வியாழக்கிழமை திருச்சிக்கு சென்றனா். அப்போது தைனேஸின் உறவுக்காரப் பெண்ணை சந்திக்க வந்த அந்த நபரை தைனேஸுடன் சென்றிருந்தவா்கள் மடக்கிப் பிடித்து தொண்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (45) என்பதும், இதேபோல, பலரிடம் பணத்தை திருடியதும், இவருக்குப் பின்னால் கும்பல் செயல்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா் மணிகண்டனை கைது செய்தனா்.

வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது

கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்து... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரக... மேலும் பார்க்க

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க

வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி

ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்ன... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு

திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க