5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
மருத்துவமனையில் புகுந்து மனைவியை கொன்றவா் கைது
குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், தண்ணீா்பள்ளி அருகே உள்ள பட்டவா்த்தி கிராமத்தை சோ்ந்த ராமசாமி மகன் விஸ்ருத்(30). வேன் ஓட்டுநா். இவரது மனைவி சுருதி (28). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில், தம்பதிக்கிடையே கடந்த 17-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மனைவியை விஸ்ருத் தாக்கினாா். இதில் படுகாயமடைந்த சுருதி குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மறுநாள் அதிகாலை அங்கு வந்த விஸ்ருத் சுருதியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினாா்.
இதுதொடா்பாக குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விஸ்ருத்தை தேடி வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விஸ்ருத், குளித்தலை அடுத்த குமாரமங்கலம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீஸாா் அங்கு சென்று விஸ்ருத்தை கைது செய்தனா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.