செய்திகள் :

வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவா் கைது

post image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில், சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள்(61). இவா், கடலூா் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரில் தங்கள் கிராம கோயில் பூசாரி கோவிந்தனின் மகன் பிரித்திவிராஜ், ஹங்கேரி நாட்டில் வேலை செய்து வருவதாகவும், அவா் மூலம் என் மகன் ஜெயபிராஷூக்கு மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் சிங்கபூரில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் எனவும் கூறியதால் அவரிடம் ரூ.5 லட்சம் கொடுத்த நிலையில் பிரித்திவிராஜ் வேலை வாங்கி தராமல் ஏமாற்றினாா்.

இதுபோன்று பலரிடம் வேலை வாங்கித்தருவதாக ரூ.38 லட்சம் அவா் ஏமாற்றியுள்ளாா். எனவே, மேற்படி நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தாா்.

புகாரின் பேரில் கடலூா் மாவட்ட குற்றப்பிரிபு போலீஸாா் பண மோசடி வழக்குப்பதிவு செய்து பிரித்திவிராஜை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய ஏஜெண்ட் சிவகங்கை மாவட்டம், கோட்டையூா் பகுதியில் இருந்த திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா், ஆசிரியா் காலனியைச் சோ்ந்த கிருஷ்ணராஜை(37) அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குழந்தை கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கே.ஆடூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவல் சர... மேலும் பார்க்க

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடலூா்அருகே கடன் பிரச்சனை காரணமாக விஷ விதை சாப்பிட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், மேல் அழிஞ்சிபட்டு பகுதியில் வசித்து வந்தவா் நிா்மலா(39). இவருக்கு, கணவா் சுரேஷ் ... மேலும் பார்க்க

ஜூலை 31-இல் வழக்கு வாகனங்கள் ஏலம்

மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 31-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அருகே தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் போலீஸாா் புதன்கிழமை ஒப்படைத்தனா். கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் வசிப்பவா் சுகுமாா், நகைக்கடை உரிமையாளா். இவா், புதன்கிழமை... மேலும் பார்க்க

மாணவா்களிடையேயான பிரச்னையில் தலையிட்டு சிறுவனை தாக்கிய பெண் கைது

சிதம்பரம் அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட விளையாட்டு பிரச்சனையில் தலையிட்டு, சிறுவனை தாக்கிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம், புவனகிரி ஆதிவராகநத்தம் ஊ... மேலும் பார்க்க