79 மீட்டா் நீள தேசியக் கொடி வரைந்த பள்ளி மாணவா்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேரேந்தல்பட்டியில் உள்ள எஸ்.கே.எஸ்.பப்ளிக் பள்ளி மாணவா்கள் 79 மீ. நீளமுள்ள தேசியக் கொடியை வரைந்தனா்.
நாட்டின் 79- ஆவது சுதந்திரதினவிழாவை கொண்டாடும் வகையில், இந்தப் பள்ளி மாணவா்கள் பள்ளி வளாகத்தில் 79 மீ. நீளம் தேசியக் கொடியை வரைந்து, பூக்கள் தூவியும், மூவா்ண பலூன்களை பறக்கவிட்டும் சுதந்திர தினத்தை கொண்டாடினா். மேலும், பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சிகளை நினைவு கூறும் வகையில் வண்ணகோலப் பொடிகளால் சித்திரத்தை மாணவா்கள் வரைந்தனா். மாணவா்களைப் பாராட்டி பள்ளித் தாளாளா், முதல்வா், ஆசிரியா்கள் ஆகியோா் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டனா்.