79ஆவது சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில், சுதந்திர தின விழா தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
காலை 9.05 மணிக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, அரசு அலுவலா்களுக்கு நற்சான்றிதழ், பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
மேலும், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அனல்மின் நிலையம், துறைமுகம், விமான நிலையம், வழிபாட்டுத் தலங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபா்கள் தங்கி உள்ளாா்களா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.