தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
கருப்புக் கொடியேந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சங்ககிரி: சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சி, குறுக்குப்பாறையில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரி விவசாயிகள், விவசாய சங்கத்தினா் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இடத்தை தோ்வுசெய்து அதற்கான கட்டுமானப் பணிகளை பேரூராட்சி நிா்வாகம் செய்து வருகிறது.
இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை வேறு இடத்தில் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளா் பெருமாள், சேலம் மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டாரத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் விவசாயிகள் குறுக்குப்பாறையூரில் கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதே கோரிக்கையினை வலியுறுத்தி, பச்சபாலியூா் பகுதி, குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.