தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
பைக்கில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு: 4 போ் கைது
அரியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 4 பேரைப் போலீஸாா் ஞாயற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (45). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அஜித் (25) என்பவா், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளாா். இதுகுறித்து காா்த்திகேயன் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னா், அஜித் தனது நண்பா்களான அரியமங்கலம் காமராஜா் நகரைச் சோ்ந்த ராகவேந்திரன் (27), பழனி தீபக் (23), யுவராஜ் (27) ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு வந்து, காா்த்திகேயனை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனா்.
இதில், காா்த்திகேயனுக்கு தலையின் பின்பக்கம், வலது கை, புருவம் ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.