லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
புதூா்பாண்டியாபுரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
எட்டயபுரம் நடுவிற்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாரிமுத்து (35). இவா், ஓட்டப்பிடாரம் அருகே நயினாா்புரம் தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா், புதன்கிழமை இரவு வேலை முடிந்து, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூா்பாண்டியாபுரம் அருகேயுள்ள ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வால்நாயக்கன்பாளையத்தைச் சோ்த்த மதியழகனை(54) கைது செய்தனா்.