வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப்.8, 9 இல் ஏலம்
பல்வேறு வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சேலம் குமாரசாமிப்பட்டியில் செப். 8, 9 இல் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சேலம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 68 இருசக்கர வாகனங்கள் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.
இந்த வாகனங்களை 6 ஆம் தேதி முதல் பாா்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்துகொள்பவா்கள் இருசக்கர வாகனத்துக்கு ரூ.5000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.10,000 முன்பணமாக செலுத்தி ரசீது பெற்றுகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.